துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக கடல்வழியாக ஒரு படகில் ஏராளமானோர் சென்றனர். துனிசியாவின் எஸ்பேக்ஸ் மாகாணத்தில் இருந்து 40 மைல் தூரத்தில் நடுக்கடலில் சென்றபோது திடீரென அந்த படகு உடைந்து கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற அகதிகள் அனைவரும் கடலில் விழுந்தனர்.

அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை மீட்டனர். இருப்பினும் கடலில் மூழ்கி 70 பேர் பலியானார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.