துணுக்காயில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

தீ காயங்களுக்குள்ளான இளம் குடும்ப பெண் ஒருவர் மூன்று நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் துணுக்காய் பகுதியில் இடம்பெற்றுள்ளுத.

துணுக்காய் தேராங்கண்டல் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான வி.ராதிகா (வயது 19) என்ற இளம் குடும்பப் பெண்ணே மேற்படி உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த 19 ஆம் திகதி வேலைக்கு போக முன்னர் விறகு அடுப்பில் சமைத்துள்ளார். அருகில் இருந்த மண்ணெண்ணெய் தவறுதலாக நிலத்திலும் விறகிலும் பெண் ணின் ஆடையிலும் சிந்தியுள்ளது.

அப்போது உடனடியாக குறித்த பெண் மீது தீ பற்றியுள்ளது. பெண்ணின் கூக்குரல் கேட்டு குடும் பத்தினர் வந்து தீயை அணைத்து மல்லாவி வைத்தியசாலையில் சேர்த்தனர்.
மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டார்.