தி.மு.க., காங்.,தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து

இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் வரும் 6 ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இரண்டு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, காங்கிரஸ் கட்சி, பொன்னேரி (தனி), வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர்(தனி), சோளிங்கர், ஊத்தங்கரை(தனி),ஓமலூர், ஈரோடு கிழக்கு, விருத்தாச்சலம்,கள்ளக்குறிச்சி(தனி),கோவை தெற்கு,உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, திருவாடனை, மேலூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி), தென்காசி,ஸ்ரீவைகுண்டம்,நாங்குநேரி, விளவங்கோடு, குளச்சல், உதகை, கிள்ளியூர், உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளும்,கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளான கோவை தெற்கு, விளவங்கோடு, உதகை வேளச்சேரி, காரைக்குடி, ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவ உள்ளது. மேலும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும் காங்., பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.