தி மு கா வின் கூட்டத்தில் திகுடு தத்தம் !! கனிமொழியின் ‘செட்டப்’ நாடகம் அம்பலம் !!

தர்மபுரி அருகே, ஏரியூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் ஒருவரை பேச செய்து, ஓட்டு வங்கியை தக்க வைக்க, தி.மு.க., நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூரில், நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.

தி.மு.க., ஆலோசனை நிறுவனமான, ‘ஐபேக்’ அமைத்து கொடுத்த அரங்கில், அவர்களால் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, தி.மு.க., கொடி பொறித்த தொப்பி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட பெயர்களை சொல்லி அழைக்க, அவர்கள் கேள்வி கேட்க, கனிமொழி பதில் கூறினார்.

நிகழ்ச்சி முடிய, கடைசி ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்த, ஏரியூர், சந்தை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த அபிதா, 24 என்ற பெண், ”இங்கு இருப்பவர்கள் ஜாதி பார்க்கின்றனர். உங்களுக்கு ஆரத்தி எடுத்தவர்கள் எல்லாம் மேல் ஜாதிக்காரர்கள் தான். கீழ் ஜாதிக்காரர்கள் யாரும் ஆரத்தி எடுக்கவில்லை. அது உங்களுக்கு தெரியுமா,” எனக் கூறி, கதறி அழுதார்.உடனே எழுந்து வந்த கனிமொழி, அபிதாவை கட்டியணைத்தார்; அவரை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். அபிதாவை பேசும்படி கூறினார்.

தொடர்ந்து அபிதா, ”நாங்கள் எல்லாம் கீழ்ஜாதிக்காரர்கள் தான். மேல்ஜாதிக்காரர்களுக்கு எல்லா உரிமையும் கொடுக்கிறீர்கள். எங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எல்லாரும் குப்பை பொறுக்கும் வேலைக்கு செல்கின்றனர்.

”எங்கள் அப்பா, அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். நான், பிளஸ் 2 வரை படித்துள்ளேன். ஒரு வசதி, வாய்ப்பில்லை. எங்கள் அம்மாவிற்கு நான்கு பெண் குழந்தைகள். என் தந்தை இறந்து மூன்று மாதம் ஆகிறது,” என்றார்.அப்போது அங்கு வந்த அவரது தாய், ‘எங்களது ஜாதியில் அனைவரும் படித்துள்ளோம். ஆனால், வேலை இல்லை. குப்பை பொறுக்கி தான் சோறு போட்டுகிட்டு இருக்கிறேன். எங்களுக்கு கழிவறை கட்டி கொடுங்கள்’ என்றார்.

தொடர்ந்து கனிமொழி பேசுகையில், ”ஒதுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்ற அந்த உணர்வு, இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு இன்னும் இருக்கிறது என்ற நிலை இருக்கும் போது, இன்னும் நம் பணியை அதிகமாக செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. இந்த கண்ணீரை துடைப்பதற்கு தொடர்ந்து பாடுபடுவோம்,” என்றார்.
கூட்டம் முடிந்ததும், அபிதாவை, பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல், ‘ஐபேக்’ குழுவினர் தனியாக அழைத்து சென்றுவிட்டனர். இது தொடர்பான வீடியோ முதலில், தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டது. அதில், அபிதா அழுவதையும், கனிமொழி ஆறுதல் கூறுவதையும் மையப்படுத்தியிருந்தனர்.

ஏரியூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் நடந்த இச்சம்பவம், முழுக்க முழுக்க, தி.மு.க., ஆலோசனை நிறுவனம் நடத்திய, ‘செட்டப்’ என தகவல் வெளியாகி உள்ளது. ஏரியூர் கூட்டத்தில், குறிப்பிட்ட காலனி பகுதி மக்கள் மட்டும் அதிக அளவில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அங்கு பேசுவதற்காக, 10 பேர் பட்டியல் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதில் அபிதா பெயர் இல்லை.திடீரென அவர் எழுந்து வந்து பேச வேண்டும் என, ஆலோசனை நிறுவனத்தினர் சொல்லிக் கொடுத்தபடி, அபிதா கடைசியாக வந்து அழுதபடி பேசியுள்ளார். ஆனால், அங்கு இருந்த தி.மு.க.,வின், ‘செட்டப்’ ஆட்கள் அதை கை தட்டி ரசித்தனர்.