தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு நேற்று மற்றும் நேற்று முன்தினம் மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அந்த மின்னஞ்சலில் அரவிந்த் கேஜ்ரிவாலை கொலை செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மின்னஞ்சலை தில்லி காவல்துறை ஆணையர் அலோக் குமார் வர்மாவுக்கு அனுப்பிய மாநில உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.