Go to ...
Canada Uthayan Tamil Weekly
* வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது    * உடல்நல குறைவு காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி    * நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல் ராமேஸ்வரம் சென்றார்    * அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு: அதிபர் டிரம்ப் அதிரடி
previous arrow
next arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Tuesday, February 20, 2018

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து


மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக்கோரிய வழக்கறிஞர் அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் சரமாரி கேள்வி எழுப்பியதோடு, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

மெர்சல் படத்துக்கு ஒரே நாளில் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொது நல அக்கறை இருந்தால் திரைப்படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோருவதற்கு வரலாம். மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வரலாம். ஆனால் வரவில்லை. இது போன்றவற்றுக்கு எதற்காக வருகிறீர்கள்?

மெர்சல் படத்துக்கு எதிராக இது போல் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்தப் படத்தில் என்ன தவறு உள்ளது என்பதைக் கூறுங்கள், அது எவ்வாறு மக்களை பாதிக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர், “டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இந்தப்படத்தில் விமர்சிக்கிறார்கள். இந்தியாவில் பணம் இல்லை என காமெடி நடிகர் வடிவேலு பேசுகிறார். மருத்துவம் குறித்து தவறாக தகவல்களைக் கொடுக்கிறார்” என்றார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் இந்தியாவில் எவ்வளவு பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். பண மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள் விமர்சித்து இருக்கின்றனரே. அவர்கள் மீது வழக்கு போடப்பட்டதா ? என்று கேள்வி எழுப்பினர்.

“இது வெறும் திரைப்படம் தானே, இது நிஜ வாழ்க்கை கிடையாதே, அதை ஏன் நிஜம்போன்று விமர்சிக்கிறீர்கள், இந்தப் படம் சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை, ஆனால் இதுபோன்ற விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளால் அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது” என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் “டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் மக்களிடம் பணம் இல்லை என வசனம் உள்ளது. இது தவறானது” என்று தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “டாஸ்மாக் கடைகளை மூடுவது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, நல்ல கல்வி தொடர்பாக பொது நல வழக்குகள் தொடருங்கள். நாட்டுக்குத் தேவையான இயக்கங்களை நடத்துங்கள். ஏன் ஒரு படத்தை மட்டும் குறிவைத்து சொல்கிறீர்கள்? நீதிமன்றத்தை பொது மேடையாக்க வேண்டாம்” என்று தெரிவித்தனர்.

மேலும், “சென்சார் போர்டு ஒரு படத்தில் எந்த வசனங்களை அனுமதிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் உரிய அங்கீகார அமைப்பு , அவர்களுக்கு அது குறித்து தெரியும்.

படத்தில் வருவது வெறும் வசனம். இதை கண்மூடித்தனமாக யாரும் நம்ப மாட்டார்கள். மேலும் அது போல வசனங்கள் வைப்பது அவர்களின் கருத்துரிமை. அதில் தலையிட முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2