Go to ...
Canada Uthayan Tamil Weekly
ஜாலியன் வாலாபாக் சம்பவம் வெட்கக்கேடு: பிரிட்டன்    * டிரம்ப்பிற்கு ஐ.எஸ்., அல்கொய்தா எச்சரிக்கை    * குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி    * குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி    * பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்கள்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, December 11, 2017

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்


யாழ் மாவட்டத்தின் “புங்குடுதீவு” என்னும் புகழ் பூத்த கிராமத்தை “பூவரசம்தீவு” என்றும் “புங்கைநகர்”என்றும் அழைப்பதுண்டு. அவ்வாறன ஒரு உன்னத மண்ணில் உதித்தவரும், அங்கு அந்நாளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருநது யாழ்ப்பாண மாவட்ட சபையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுககபபட்டவருமான திரு சோமசுந்தரம் அவர்களது புதல்வராகவும், பின்னாளில் புங்குடுதீவின் கிராம சேவகராக பணியாற்றியவருமான திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும் கனடா பிரம்டன் ஈற்றோபிக்கோ நகரில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.
ஆரம்பத்தில் திரு சச்சிதானந்தன் மறறும் அவரது துணைவியார் ஆகியோர் இருவரும் நாதஸ்வர தவில் இசை முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள்.
தொடர்ந்து பாராட்டு உரைகள் கலை நிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெற்றன. சுமார் 800 ஆசனங்கள ஒதுக்கப்பட்டு அதற்கு மேலாகவும் மக்கள் நின்ற வண்ணம் நிகழ்ச்சிகளை அவதானித்துக்கொண்டிருந்தார்கள்.
மிகவும் நெருக்கமாகவும் மகிழ்ச்சியுடனும் அங்கு கலந்து கொண்ட ஒவ்வொருவரும் “சசசி” அவர்களின் விழாவைக் கொண்டாடி மகிந்தது நிச்சயம் குறிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டியதொன்றாகும்
வாழ்த்துரைகள் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைஞர்கள் கல்விமான்கள் ஆகியோர் அமைதியாக வரிசையில் நின்று தங்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த சச்சி என்னும் “தேவாரச் செம்மல்” , அவரை வாழ்த்துவதற்காக கால்கள் நோவெடுத்தாலும் காத்திருந்து நகர்ந்து சென்றனர்.
எமது கனடா உதயன் பிரதம ஆசிரியர் எழுதிய கவிதை வரிகள் , நேற்று வெளியிடப்பட்ட மணிவிழா மலரில் பிரசுரமாகியுள்ளது. “சச்சி”அவர்களின் மணிவிழா மலருககு “காந்தக்குரலோன் கடந்து வந்த பாதை” என்று பெயரிடப்பட்டிருந்தது.
எமது பிரதம ஆசிரியர் அவர்களின் வாழ்த்துக் கவிதையின் வரிகள் சில கீழே காணபபடுகின்றன.

“தேவாரச் செம்மலுக்கு பூமாலை அணிவித்து
மேடைக்கு அழைத்து வநது
துணைவியார் அருகிருக்க
ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கும்
அரைவட்ட நணபர்கள்
அமர்க்களமாய் அரங்கம் அதிர்கிறது
கொண்டாட்டம் ஒன்றை மட்டும்
குறியாகக் கொள்ளாத நட்பு
காலநேரம் பாராமல் துயரத்தில் பங்கெடுக்க
ஓடி வரும் பண்பு
உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தால்
உருகிப் பாடி
கன்னத்தில் வடியும் கண்ணீரை
காய வைக்கும் நேயம்
சச்சியின் பிரசன்னம் எம் துன்ப துயரத்தை
தூர விலக்கிவிடும் நேரம் கூட இடரின்றி நகரும்
கச்சிதமாய் காற்று தரும் இதம் போல குரலில்
கலந்து வரும் தெய்வீகம் கீதங்களில் துலங்கும்”

இவ்வாறாக அந்த வாழ்த்துக்கவிதை நகர்கிறது.  திரு சோம சந்திதானந்தன் அவர்களின் மணிவிழா வெற்றி பெற உழைத்த அனைத்து நண்பர்க்கும் கனடா உதயனின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2