திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார்

இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள் மார்க்கம் மாநகரசபைக்கான தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடும் வட்டாரமான இலக்கம் 7 இல் போட்டியிடும் திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் வகையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை அவரது தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.

அங்கு திரு சோதி செல்லாவிற்கு ஆதரவைத் தேடித் தரும் வகையில் உழைத்து வரும் தொண்டர்களுக்காக சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற உதயன் பல்சுவைக் கலைவிழாவின் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் என்பதும் சென்னை மாநகராட்சி மன்றத்தின் கவுன்சிலராக நான்கு தடவைகள் பணியாறறியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.