திரு. சுரேன் சிவானந்தன்

மரண அறிவித்தல்

தோற்றம்:- 26-08-1984 மறைவு:- 21-01-2017
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுரேன் சிவானந்தன் அவர்கள் 21-01-2017 அன்று லண்டனில் அகால மரணம் அடைந்ததை ஆழ்ந்த அனுதாபகங்களோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னார் சிவானந்தன் - சுமதி தம்பதிகளின் அன்பு மகனும், சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுரேஸ் மயூரன் ஆகியோரின் மைத்துனரும், நிதுசன், பிபிசன், சர்மினி, கிசான் ஹாசினி, இனியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5:00 - பி.ப. 9:00 வரையும், 27-02-2017 திங்கட்கிழமை மு.ப. 8:00 - மு.ப. 9:30 வரையும் 8911 Woodbine Ave., Markham, ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Center ல் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப. 9:30 - மு.ப. 11:30 வரை கிரியை நடைபெற்று 12492 Woodbine Ave., Gormley, ON, L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Crematorium ற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சிவானந்தன் (தந்தை)
(647) 290-5750
சுரேஸ் (மைத்துனர்)
(647) 726-0087