- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

திரு. சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்(துரை)
மரண அறிவித்தல்
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகனும் காலஞ்சென்றவர்களான சின்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சற்குணநாயகி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும், இரவீந்திரன்(கனடா), செல்வேந்திரன்(ஜேர்மனி), ஞானேந்திரன்(கனடா), யோகரஞ்சிதம் (கனடா), விமலரஞ்சிதம் (கனடா), கிருபரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், காலஞ்சென்ற கனகசுந்தரம், காலஞ்சென்ற தையல்நாயகி, செல்வநாயகம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, அன்னப்பிள்ளை, சின்னத்துரை, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற இந்திராணி, சரோஜா, அன்பரசி, மதிவதனி, சேனாதி, ஹென்றி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கிரிசாந்தன், பார்கவி, விஷ்ணுவி, தாவிதன், மயூரிகா, வினீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நவம்பர் 26ம் திகதி, 2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 27ம் திகதி திங்கட்கிழமை காலை 08.00 தொடக்கம் 9.30 வரையும் Chapel Ridge Funeral Home, located at 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் முற்பகல் 9.30 தொடக்கம் 11.30 மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் மதியம் 12.00 மணிக்குHighland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்