திரு. கனகர் குமாரசாமி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

(இளைப்பாறிய கணக்காளர் -Indian Overseas Bank, Colombo) (பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி)
மலர்வு: February 10th 1932 உதிர்வு: January 6th 2015
யாழ்ப்பாணம் திருநெல்வேலி, கொழும்பு ஆகிய இடங்களில் வசித்தவரும் பின்னர் கனடா, பிராம்ப்டனை (Brampton) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கனகர் குமாரசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
இயற்கையின் நியதியை இயல்பாக ஏற்றீர்கள் - உடன் இருந்தவர் மனதினை இடியாக்கிப் போனீர்கள் விடியாத நாட்களாய் வெளி வானம் பார்க்கின்றோம் - இன்று கடிவாளம் இல்லாமல் கதியாக நிற்க்கின்றோம் புதிதாக நடந்தீர்கள் வருடங்கள் இரண்டாச்சு புரியாத இடம் எல்லாம் தாண்டித்தான் சென்றாச்சு நடந்திட்ட பாதையை மனதினில் கொள்ளுங்கள் - நாம் தொடர்கின்ற போதிலே மறக்காமல் சொல்லுங்கள் துணையாக வாழ்ந்திட்ட துயைவியார் துடிக்கையில் பிணைப்பென பிறந்திட்ட பிள்ளைகள் கலங்கையில் அலை என்ற பெயரிலே நாம் இங்கோர் கரையிலே - நீங்கள் ஆழ்கடல் தாண்டித்தான் அக்கரை சேர்ந்தீரோ பத்திரகாளி என் பலம் என்று சொல்வீர்கள் - உடன் துர்க்கை அம்மனும் துணை எனக் கொண்டீர்கள் பகை கூட வியந்திட்ட மனிதராய் வாழ்ந்தீர்கள் - இன்று துயரத்தில் எமை அழ்த்தி தூரத்தே சென்றீர்கள் கனகரின் முதலான புதல்வனாய் உதித்தீர்கள் கணக்காளர் என்கின்ற தொழிலையே கொண்டீர்கள் காலனின் பார்வையில் கண்முன்னே நின்றீர்கள் - இன்று காலங்கள் இரண்டைத்தான் கடந்துமே சென்றீர்கள்.;........
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். உங்கள் பிரிவால் வாடும்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்.
(416) 473-0998