- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலும் இந்து அல்லாத பெண் ஒருவர் நுழைந்தது சர்ச்சை
பத்மநாபசுவாமி கோவிலின் உள்ளே இந்து அல்லாத பிற மதத்தினர் செல்ல தடை உள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அல்பாசி உற்சவ விழா நவ., 5ம் தேதி துவங்கியது. நேற்று (நவ.,11ம் தேதி) விழா பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது இந்து அல்லாத பெண் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து விட்டதாக தகவல் வெளியானது.
இதைக் கேள்விபட்ட தலைமை தந்திரி தாரநல்லூர் நம்பூதிரி பூஜைகளை உடனே நிறுத்த உத்தரவிட்டார். கோவில் கதவுகள் மூடப்பட்டு கோவிலை புனிதப்படுத்தும், சுத்திகிரி பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை நடக்க இருந்த,’எழுநெல்லது’ பூஜைகளும் நிறுத்தப்பட்டன.
இது குறித்து கோவில் ஊழியர்கள் கூறுகையில், ‘ கோவிலுக்கு வெளியே, ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பிற மத ஆடை அணிந்த பெண் ஒருவர் கோவில் அருகே வந்து, தான் அணிந்து இருந்த ஆடையை அகற்றி விட்டு, கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் பாரம்பரிய ஆடையை அணிந்து கோவிலுக்குள் நுழைந்தது, ‘சிசிடிவி’யில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இது குறித்து போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது’ என்றனர்.
இக்கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.