- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

திருமலையில் குவியும் முதல்வர்கள்
தேர்தல் முடிவு வெளி வந்து விட்ட நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, பல மாநில முதல்வர்கள் குவிந்து வருகின்றனர்.
நாட்டில், 17வது லோக்சபா தேர்தல், ஏப்ரல், 11 முதல், மே, 19 வரை, ஏழு கட்டங்களாக நடந்தது. நான்கு மாநிலங்களில், சட்டசபைக்கான தேர்தலும் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை, 23ல் நடந்து முடிந்தது. மத்தியிலும், மாநிலங்களிலும் புதிய அமைச்சரவை அமைய உள்ளது. இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று ஏழுமலையானை தரிசித்தார். அவரை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நேற்று மாலை திருமலைக்கு வந்தார்.

அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். அவரை அடுத்து, ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, நாளை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.தேர்தல் முடிவுகளுக்காக வேண்டுதல் செய்து கொண்ட, பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஏழுமலையானை தரிசிக்க, திருமலையில் குவிந்து வருகின்றனர்.