மட்டக்களப்பு பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா செபரத்தினம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி சீனித்தம்பி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வித்துவான் செபரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும், அமுதநாதன்(இலங்கை), ஆனந்தநாதன்(அவுஸ்திரேலியா), தவசெல்வி (ஸ்கொட்லாந்து), தவநளினி(நளோ-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், வத்சலா, ஷிராணி, வித்தியானந்தன், குபேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, வேல்முருகு ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான செல்வம், மகேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சேரா, ஜொனத்தான், சாரா, ஜோசுவா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், ஜெருஷா, டெபோரா, அருண், ஆகாஷ் அஷானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14.04.2017 வெள்ளிக்கிழமை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home 05:00 பி.ப 09:00 பி.ப வரையும் 15.04.2017 சனிக்கிழமை 09:00 மு.ப — 10:00 மு.ப வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 10:00 மணி தொடக்கம் மு.ப 11:00 மணிவரை நல்லடக்க ஆராதனை நடைபெற்று, பின்னர் 7770 Steeles Ave, Markham, ON, L6B 1A8 இல் அமைந்துள்ள Christ The King Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.