Go to ...
Canada Uthayan Tamil Weekly
* கர்நாடக தற்காலிக சபாநாயகர் நியமனம்    * அச்சுறுத்தும் எபோலா வைரஸ் காங்கோவில் 23 பேர் பலி    * ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தோ்வு
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, May 21, 2018

திருமதி. நீலவேணி விசுவலிங்கம்


30ம் வருட நினைவஞ்சலி

மலர்வு:  25-09-1944  –  உதிர்வு: 13-11-1987

அனலைதீவைப் பிறப்பிடமாகக்கொண்டு வாழ்ந்து பிரிவெய்திய திரு. விசுவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவி திருமதி. நீலவேணி விசுவலிங்கம் அவர்களின் 30வது ஆண்டு நினைவஞ்சலி.

என்னவளே இணைபிரிந்து ஏக்கமுற எனைவிட்டு
முன் உயர்வாய் போன கதை மூபத்து ஆண்டுகளாம்
மன்னுதுயர் மனதுறைய மனையவளே மறை வெண்ணி
இன்பறவே என்வாழ்வு இருந்தகன்று போனதம்மா…

நில்லா நிலவாழ்வு நின்றகன்று போகுமுன்னே
பொல்லா நோய் புகுந்துன்னை பொழுதெல்லாம் வாட்டியதே
எல்லாம் அவன் ஆடல் ஆட்கொள்ள என்றுணர்ந்து
கல்லாகிப் போனமனம் கனிந்தாற்க கண்டதம்மா…

உற்ற நற் சுற்றம் பேணி ஊரவர் உறவு பேணி
மற்றவர் துன்பம் தாங்கா மனதுறு கருணை பேணி
பற்துயர் வாழ்வில் என்னைப் பதியென பணிகள் செய்து
வெற்றுடல் விட்டு நீயோ விண்ணிடை போந்ததேனோ

வய்தாலும் வழக்குரையாய் வசை கூறாய் வாழ்வதினில்
பொய்யாய் மொழிபுகழாய் போயகலப் புறங்கூறாய்
வெய்ய வினையறியாய் வெருவியோர் பகையறியாய்
துய்யதோர் உள்ளத்து தூமணியே நீயம்மா…

தாயினும் அன்பு மேலாய் தணிவுயர்
பேச்சுவல்லாய் வாயினும் மனுத்தும் ஒன்றாய் வஞ்சனையற்ற நெஞ்சாய்
காயினும் உள்ளம் காட்டா கனிமுகத்து அன்பு கொண்ட
சேயினாய் போயுமென்ன சேர்ந்துளத்துறைவாம் என்றும்

அஞ்சுகம் நீயே எந்தன் அகத்துணை அன்பு மேலாய்
விஞ்சுயர் வாழ்வு சேர விடியலாய் ஒளிர்ந்தபோதும்
நெஞ்சுயர் நினைவு யாவும் நீர்ப்பனியாகக் காய
வஞ்சகம் செய்து என்னை வையகம் விட்டேன் போனாய்

பெற்ற நின் பிள்ளைச் செல்வம் பேறுற பெருமை சேர்த்தும்
உற்ற உன்பாசம் காணா உணர்வினால் உள்ளம் காய்ந்து
அற்ற நீர் பறவையாக அனுதினம் அகத்தால் வாடி
பெற்றவர் உன்னைத் தேடும் பெருவலி தீர்ப்பாயம்மா…..

காத்திருந்து கைப்பிடித்தேன் காலமெல்லாம் களிகூர
பூத்திருந்து என்மனதில் பொலிவு சுகம் தந்தவளே
நீத்து உயிர் விட்டகன்று நெடுந்தூரம் போனாலும்
கூத்தவனை வேண்டி உனை கூட்டிவைக்க வேண்டுகின்றேன்…..

கரைமோதும் கடல் அலையாய் கனிமனதில் நினைவாட
நிரைபோன துறவகன்ற கன்றெனவே உனைத் தேட
அரை உலையிற் கரும்பெனவே அனுதினமும் அகம் நோக
உரை விரையாய் உயிர் போனாய் உணர்வகன்று ஏங்குதம்மா…..

கருவறை கனத்து நோக கடுவலி அனைத்தும் தாங்கி
பெருவரச் செல்வப் பேறாய் பிள்ளைகள் பெற்றுத் தந்து
வருபலன் கூடு முன்னே வையத்துப் பாதி வாழ்வில்
உருகிட வைத்து என்னை உயிரினை விட்டதேனோ…..

கண்துயில் தேடும் உன்னைக் காணவே கனவில் என்றும்
எண்மனத் தெண்ணம் உன்னை இணையுறு வாழ்வுக் கேங்கும்
உண்ணிடும் உணவு தோறும் ஒளிமுகத் தோம்பல் தோன்றும்
மண்ணில் என் மாயை வாழ்வு மாவிதிப் பலனோ என்ன….

போற்றுவேன் போற்றி உன்னை புகழுவேன் புகழ்ந்து அன்பால்
ஏற்றுவேன் இணையே என்றும் என் உயிர் இதயம் சேர
ஆற்றுவேன் அவலம் ஓர் நாள் அணித்துனைச் சேர்வேன் என்று
பேற்றும் செல்வமானாய் பெரிது உயர் காலம்வாழி…

இங்ஙனம்: உன் நினைப்பாய் வாழும் கணவன் செ. விசுவலிங்கம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2