திருமதி. சுந்தரலிங்கம் பவளமலர் (அம்மா)

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 15-09-1948 - மறைவு:- 02-04-2015
இரண்டு ஆண்டு காலம் உருண்டு ஓடினாலும் தீருமா எம் துயரம்? தீராத துயரத்தில் எம்மை விட்டு சென்றது சரிதானா?

அன்போடு அணைத்தாயம்மா...பண்போடு வளர்த்தாயம்மா...
உன் அன்புக்கு ஈடு இணையேதம்மா
இறைவன் கூட அடிபணிவான் உன் பாசத்திற்கு.....

அன்று எம் முகத்தில் அனந்தத்தை மட்டும் பார்த்து ரசித்தாயே...
இன்று எம் விழிகளில் கண்ணீரை மட்டும் விட்டு சென்றது ஏனம்மா?
நூறாண்டு சென்றாலும் எம் உள்ளத்தில் வாழும் தெய்வம் நீயம்மா...

நிழலாய் நியமாய் எம் சுவாசத்தில் உயிராய் கலந்திருக்கும்
எமைப் பெற்ற அன்னையே
உன் பிரிவால் காற்றிலாடும் ஒளி விளக்காய் இன்று நாங்கள்..
விளக்கின் ஒளி போல எம்முடன் உயிராய்க்
கலந்திருக்கும் எம் அன்னையே
இப்பிறவியில் உன்னை நாம் எப்பொழுது காண்போமோ?

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறை வனைப் பிரார்த்திக்கும்

கணவன், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

905-472-1099