- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

திருமதி காங்கேசு சிவபாக்கியம்
31ம் நாள் நினைவஞ்சலி
வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மற்றும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த காங்கேசு சிவபாக்கியம் அவர்கள் 28-11-2016 அன்று திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்றவர்களான நிவிற்றிகலை பிரபல வர்த்தகர் சண்முகம்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும் க.காங்கேசு (முன்னாள் அதிபர் மற்றும் ஸ்தாபகர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், கதிர்காமநாதன்,தர்மபாலன்(அவுஸ்த்திரேலியா) தியாகராசா, விமலேந்திரன் (கனடா) சோமநாதன்(கொழும்பு) மற்றும் காலஞ்சென்றவர்களான யோகவதி, மீனாம்பிகை, கோபாலபிள்ளை, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், விமலசோதி (கொழும்பு), ஞானஸ்கந்தன்(கனடா), கலாஜோதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தவராசா(கொழும்பு), பிரேமலா, சர்வவேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும், அசலை-சிவகுமார், அமலன்-கார்த்திகா, நிமலி-ஐங்கரராஜ், சாமனை-டிலக்~ன், மாதங்கி-ஜமால், பிரணன், சுகன்யா-பேக்மன்,கபிலா, தரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நவரத்தினம் மற்றும் சாரதா, சுகுணரஞ்சிதம் ஸ்ரீதேவி,ரஞ்சிதமலர், சிவகுமாரி, மீனலோசனி, சிவலோகநாயகி, காலஞ்சென்ற பாக்கியலக்சுமி, மருதையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் வீரலக்சுமியின்; மாமியாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 01-12- 2016 அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் தெகிவளை கல்கிசை மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
நாட்கள் நகர்ந்து மாதமொன்று ஓடிமறைந்ததுவோ நகரவேயில்லை. அம்மாவின் பிரிவின் வலியின்துயரம் மாதங்கள் பல ஆனாலும் ஆறாது அம்மாவின்துயர்வளமாய் எங்களை வாழவைத்த தெய்வம், வானுலகு சென்று மறைந்திட்ட நாள்முதலாய் ஊக்கம் உறக்கம் இன்றி வாடுகின்றோம் எம் தாயே உந்தனை அன்னையாய் பெற்றதில் என்றும் பெருமை உன் நினைப்போடுநாளும் வாழ்வதும் பெருமை ஆண்டவன் திருவடியில் அமைதியாய் இளைப்பாறிடு தாயே அன்புருவம் என்றும் எம்இதயங்களில் அம்மா