திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் முன்னாள் ஆசிரியையும் கனடாவில் கடந்த 13வருடங்களாக பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் நல்ல தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொண்ட பல மாணவ மாணவிகளை உருவாக்கிவருகின்றவருபவருமான திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல் பயணத்தில் இன்று ஒரு பொன்னான நாளை அனைவரும் தரிசித்தோம்.

அவரது பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருநதினராக முன்னாள விரிவுரையாளர் திரு கணபதிப்பிள்ளை கலந்து சிறப்பித்தார்.அருட்கவி திரு ஞானகணேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கனடா உதயன் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் மற்றும் கவிஞர் கலாராஜான், டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

மேலும் இன்றைய விழ◌ாவில் தமிழ் மொழிப் பயிற்சி தரம் 11 தரம் 12 ஆகிய பாடநெறி நூல்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு துறைசார்ந்த அன்பர்கள அங்கு நூல்ப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தில் கற்று வரும் மாணவ மாணவிகளின் தமிழ் ◌மொழி தொடர்பான ஆற்றலை வெளிக்காட்டும் வகையில் பல மேடை நிகழ்வுகள இடம்பெற்றன. அவற்றுள் உரைகள், பாடல்கள், மற்றும் நடன ஆகியன முக்கியத்துவம் பெற்றன.

பெற்றோர் மாணவ மாணவிகள் மற்றும் துறை சார்ந்த பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இவ்விழா இவ்வருடத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தின் மேன்மையை வெளிக்காட்டும் வகையிலும் இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது.