Go to ...
Canada Uthayan Tamil Weekly
* டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை    * காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கனடா பிரதமர் சந்திப்பு    * எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர் டிடிவி தினகரன் மிரட்டல்    * ஆஸ்திரேலிய துணை பிரதமர் ராஜினாமா    * அமெரிக்காவில் துப்பாக்கிக்கு தடை விதிக்க டிரம்ப் தீவிரம்
previous arrow
next arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Saturday, February 24, 2018

திருமணமான 15 நாளிலேயே காவலர் டெங்குவால் பலி


டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் நேற்று உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள உலக்குடியைச் சேர்ந்தவர் தங்கச்சாமி(27). இவர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்தார். சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், காய்ச்சல் அதிகரித்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2