Go to ...
Canada Uthayan Tamil Weekly
* வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது    * உடல்நல குறைவு காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி    * நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல் ராமேஸ்வரம் சென்றார்    * அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு: அதிபர் டிரம்ப் அதிரடி
previous arrow
next arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Wednesday, February 21, 2018

திருடர்களுக்கு சுதந்திரக்கட்சியில் இடமில்லை என்றும் தூய்மையானவர்களுக்கு மட்டுமே “அழைப்பு” என்கிறார் ஜனாதிபதி


மோசடியில் ஈடுபட்ட திருடர்களுக்கு சுதந்திரக் கட்சியில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த அணியினருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். மேலும் குற்றச் சாட்டுகள் அற்ற தூய்மையான அரசியல்வாதிகளுக்கே தாம் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருடர்களைப் பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு தூய்மையான அரசி யல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்துகொள்ள முடியாது இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்தார்.
சிலரால் எமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாதென்பதை அறியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரை யும் எம்முடன் ஒரே அணியில் அணிதிரளு மாறு நான் அழைப்பு விடுக்கவில்லை என் றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர் தலில் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் வரையில் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பொது எதிரணி யாகச் செயற்படுகின்றனர்.
அவர்களால் பொதுஜன பெரமுன என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் கட்சி நடை பெறவுள்ள உள்;ராட்சித் தேர்தலில் தனித் துப் போட்டியிடுகின்றது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுபவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மீள இணைந்தால் நாளைக்கும் அரசு அமைப்பேன் என ஜனா திபதி கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அழைப்பை மகி ந்த அணியினர் மறுத்திருந்தனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, தமது குறிக் கோள்களை நிறைவேற்ற எவரும் எவ்வகை யில் செயற்பட்டபோதிலும் நாட்டுக்கு தேவை யான தூய்மையான அரசியல் பயணத்தை எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் நான் வெற்றிகொள்வேன்.திருடர்கள் அற்ற, திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடாத, அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தூய்மையான தேசத்தை கட்டியெழுப்பி முன்னோக்கி செல்ல நான் அழைப்பு விடுக்கின்றேன்.
2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனா திபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலி லும் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்;ராட்சி மன்ற தேர்த லில் அமோக வெற்றியைப் பெற்றுக்கொள்ள கூடியவாறு தற்போது கட்சி வலுப்படுத்தப்ப ட்டுள்ளது.
ஊழல் மோசடிகளற்ற தூய்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கும் நாட்டை நேசிக்கும் சகல மக்களும் எம்முடன் கைகோர்த்துள்ள னர்.1994ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அர சின் முதலாவது சட்டமான அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஊழல் மோசடிகள் பற்றிய குற்றச் சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணை க்குழு சட்டம் அங்கீகரிக்கப்பட்டு தற்போது 23 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் இவ்வ ளவு காலமும் குறித்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நான்கு பேரே குற்றவாளிக ளாக இனங்காணப்பட்டுள்ளனர்.விசாரணை நடவடிக்கைகளை முறை யாக மேற்கொள்ள இடமளிக்காமையும் கட ந்த அரசின் காலப்பகுதியில் அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்புகளுமே அத ற்கு காரணம்.ஊழல், மோசடிகளை நாட்டிலிருந்து இல்லாதொழிக்காமல் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இல்லை. ஊழலுக்கு எதிரான போரா ட்டத்தில் கட்சி, நிறம், இனம், மதம், சாதி வேறுபாடுகளை கருத்திற்கொள்ளாது சகல மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற் கான தேவை காணப்படுகின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2