திருசமீம் மொகமட் தலைமையிலான வீடு விற்பனை நிறுவனமான Century 21 Innovative Realty Inc நடத்திய வருடாந்த விருது விழா

பிரபல வீடு விற்பனை நிறுவனஅதிபர் திருசமீம் மொகமட் அவர்களின் Century 21 Innovative Realty Inc தனதுவருடாந்தர விருது வழங்கும் விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஸகாபுறோ கொன்வென்சன் சென்றர் மணடபத்தில் சிறப்பாக நடத்தியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் அங்கு கலந்து சிறப்பித்தனர்.

பல வெற்றியாளர் தங்கள் விற்பனைச் சாதனைகளுக்காக சிறப்பு விருதுகளைப் பெற்றார்கள். முதற்பிரிவு வெற்றியாளர்களாக பல விற்பனை முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கேகாணப்படும் படத்தில் முதன்மை விருதுகள் பெற்றவர்களான திரு தனாசசீந்திரா மற்றும் திரு அருள் சிவ சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு சமூகமளித்த மோட்கேஜ் திரு விமல் நவரட்ணம் மற்றும் திரு ஞானி ஞானேந்திரன் ஆகியோரோடு நிற்பதைக் காணலாம்.