திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது

நாளை 30ம் திகதி சனி;ககிழமை நடைபெறவுள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி 11120 Tapscott Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள “தமிழிசைக் கலாமன்ற” மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாட்டியம் மற்றும் பாரதி ஆர்ட்ஸ் இசைக்குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி ஆகியன சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன. ஆதரவற்ற சிறார்களின் வாழ்வாதரத்திற்கு நிதி சேகரிக்கும் முகமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 823 8588, 647 448 6869 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.