திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் சுகந்தி!!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம் நாளை 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டத்தை வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் மற்றும் தென்னிலங்கை சகோதர ஊடக அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.திருமலையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.