“திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர், தமிழ்ப் பணி சஞ்சிகையின் ஸ்தாபகர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் ஸ்தாபகர் காப்பாளர் உலகக் கவிஞர்கள் சங்கத்தின் தீவிரமான ஒரு அங்கத்தவர் என பல்வேறு பின்தளங்களைக் கொண்டாலும், தமிழ் தான் என் உயிர் என்றும், “திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா.

மு. சேதுராமன் அவர்களின் மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) ஸ்காபுறொ நகரில் மார்க்கம் வீதியில் அமைந்துள்ள பெபியன கபே மண்டபத்தில் ( ) நடைபெற்றது.
திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் சட்டத்தரணி திரு மனுவல் ஜேசுதாசன் ஆகியோர் விழாவை வழி; நடத்தினார்கள்.

பல்வேறு துறைசார்ந்த அன்பர்கள் அறிஞர்கள் அங்கு கலந்து கொண்டு பெருங்கவிக்கோவின் நூல் பிரதிகளை பெற்றுச் சென்றார்கள்.. “பெ ரு ங் க வி;க் கோ” வா. மு. சேதுராமன் அவர்கள் தனது பதிலுரையின் போது பின்வருமாறு பேசினார்.
“தமிழ் நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கின்றது. தமிழை வாழ வைக்கும் நோக்குக் கொண்டவர்கள அங்கு பெரிதாக இல்லை. எனது இரண்டு ஆசைகளில் ஒன்று தமிழ் அறிஞன் ஒருவனுக்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும். தமிழனுக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும். ” என்றார்.
மேற்படி தனது ஆசைகளை சபையோரோடு பகிர்ந்து கொண்ட போது “பெ ரு ங் க வி;க் கோ” வா. மு. சேதுராமன் அவர்களின் கண்களில் கண்ணீர் பனித்திருந்ததை அனைவரும் அவதானித்தார்கள்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்