- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

திரிணாமுல் காங்., உடன் மோதுபவர்கள் அழிக்கப்படுவார்கள் – மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி
மேற்குவங்கத்தில் ரம்ஜானை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மம்தா, எங்களுடன் மோதுபவர்கள் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். சூரியன் உதிக்கும் போதும் மிக பிரகாசமாக தான் இருக்கும். பா.ஜ.,வும் அது போல தான் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி பிரகாசமாக உதித்துள்ளது. ஆனால் வந்தபடியே அவர்கள் வீழ்ந்து விடுவார்கள். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி அதன் மூலம் வெற்றி பெற்றவர்கள், விரைவில் காணாமல் போய் விடுவார்கள்.
ஹிந்துக்கள் நம்பிக்கையின் பக்கம் நிற்கிறார்கள். இஸ்லாமியர்கள் நேர்மையின் பக்கம் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அன்பின் பக்கமும், சீக்கியர்கள் தியாகத்தின் பக்கமும் உள்ளனர். இது தான் எங்களின் அன்பிற்குரிய ஹிந்துஸ்தான். நாங்கள் அதனை பாதுகாப்போம் என்றார்.
மம்தாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வரும் பா.ஜ., பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்., அரசு தனது முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யாது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே மாற்றம் வேண்டும் என அவர்கள் கட்சியினரே வலியுறுத்தி வருகின்றன. மம்தா ஒரு அராஜக சர்வாதிகாரி என தெரிவித்துள்ளார்.