திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும் – இலங்கை அதிபர் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து அறிய மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருக்கின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனை வந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விவசாரித்து செல்கிறார்கள். இந்நிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் தலைமையில், இலங்கை மந்திரிகள் செந்தில் தொண்டைமான், ராமேஸ்வரன் ஆகியோர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா வழங்கிய கடிதம் ஒன்றை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்யாதவ் சந்தித்து கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார்.