திமுகவினர் பள்ளிகளில் இந்தி: எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி

இந்தியை கற்க சொல்லும் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் அரசியல்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக இந்தியை எதிர்ப்பது ஏன் என்பது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகள் பெயர் விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக எச்.ராஜா அவரது டுவிட்டரில் ;

திமுகவினர் இந்தி திணிப்பு என வெளியில் காட்டி கொண்டு அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிப்பு ஏன் என்று ?அவரது டுவிட் வருமாறு ;

@HRajaBJP
அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிப்பு ஏன் என்று