திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

திப்பு சுல்தான் தொடர்பான அனைத்தையும் கைவிட உள்ளோம். திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

‘மைசூர் புலி’ என்று அழைக்கப்படும் திப்பு சுல்தான், ஒரு சுதந்திர போராட்ட வீரர் எனக் கூறி, காங்., கட்சி 2015 முதல் அவரின் பிறந்தநாளை (நவ., 10) கொண்டாடி வந்தது. ஆனால், அவர் ஒரு மதவாதி என பாஜ.,வை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கா்நாடக பள்ளிப்பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திப்பு சுல்தான் பற்றிய தகவல்கள் அனைத்தும் தவறானது. பலரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய அவர் சுதந்திர போராட்ட வீரரும் இல்லை. எனவே அவர் குறித்த பாடத்தை நீக்குமாறு குடகு மாவட்டத்தின் பாஜ., எம்.எல்.ஏ., அப்பச்சு ரஞ்சன் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், திப்பு சுல்தான் ஜெயந்தி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, திப்பு சுல்தான் ஒன்றும் சுதந்திர போராட்ட வீரர் அல்ல. அவர் தொடர்பான அனைத்தையும் கைவிட உள்ளோம். திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார். இதற்கு காங்., சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.