தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி

இரட்டை இலை சின்னத்தை  பெறுவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் வழங்க டெல்லி போலீசார் நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்கள் இரவு 11 மணி அளவில் சென்னை பெசன்ட்நகரில்  உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். திடீரென்று மயிலாப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

உடனே அங்கிருந்த பாதுகாப்பு  போலீசார் ரவிச்சந்திரனை  மடக்கி பிடித்து அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வரு கிறார்கள்.