- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் தனக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் அந்த மனுவில் கோரி இருந்தார்.
இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எஸ்.பி.கார்க் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பதிலளிக்குமாறு, அதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.