- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் ரூ. 3 கோடிக்கு வீடு கட்டியது எப்படி? கோடி கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். இவர் நடிகர்கள் மற்றும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு ஜோதிடராக இருந்துள்ளார். மேலும் இவர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் குடும்பத்துக்கு ஆஸ்தான ஜோதிடராக பல ஆண்டுகாலமாக இருந்துள்ளார். அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் பங்கு சந்தை புரோக்கராகவும் இருந்து வந்தார்
இந்த நிலையில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 9-ந் தேதி மாலை 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட் டது.
அங்கிருந்த கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடு பத்திரங்கள் சிக்கின. நேற்று 2-வது நாளாகவும் அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை நடை பெற்றது. அதன் பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இன்று காலை 6 மணிக்கு மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டுக்கு வந்தனர். அங்கு கதவுகளை பூட்டிக் கொண்டு 3-வது நாளாக தங்களது சோதனையை தொடங்கினர்.ஜோதிடர் சந்திரசேகர் பங்கு சந்தையில் அதிக அளவு பணம் முதலீடு செய்துள்ளார். அந்த பணம் அவருக்கு எப்படி வந்தது? முக்கிய பிரமுகர்களின் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்து ஜோதிடர் சந்திரசேகரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அவரது வீடு மற்றும் அலுவலகத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. ஒரு ஜோதிடர் இந்த அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.மேலும் அவரது வீட்டில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை யாராவது பரிசாக வழங்கி இருக்கலாம் என்றும் தெரிகிறது. இது தொடர்பாகவும் அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.