திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல்

கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். விரைவில் போராடி இதில் இருந்து வெளியே வருவோம் என டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல் கூறி உள்ளார்.

வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் செப்., மாதம் சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 23 வயதாகும் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2013 ல் ரூ.1 கோடியாக இருந்த ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு 2018 ல் ரூ.100 கோடிக்கும் மேலாக அதிகரித்தது எப்படி என விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சிவக்குமாருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் இன்று காலை காங்., தலைவர் சோனியா, அம்பிகா சோனியுடன் திகார் சிறைக்கு சென்று சந்தித்தார். அப்போது சிவக்கமாரிடம் சோனியா, கட்சி உங்களுடன் உள்ளது. உங்களுக்கு ஆதரவாக நிற்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த போடப்பட்டுள்ளது.

மற்ற காங்., தலைவர்களையும் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு குறிவைத்துள்ளது. அவர்களுடன் நாங்கள் மோதி, இதிலிருந்து வெளியே வருவோம் என ஆறுதல் கூறி உள்ளார். சமீபத்தில் சிவக்குமாரை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வந்தார்.