தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

பிரதமர் மோடி, தான் தனது தாயுடன் வசிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் அக்சய் குமாருக்கு கலந்துரையாடல் வடிவில் அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பாற்றுபட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, தனது தாய் குறித்தும், தான் தனது தாயுடன் வசிக்காததற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார். அதில் அவர், மிக இளம் வயதிலேயே நான் என் தாயை பிரிந்து வந்து விட்டேன். சிறு வயதிலேயே அனைத்து பற்றுகளில் இருந்தும் விடுபட்டேன். அனைத்து பந்தங்களும் மாயை என்பது தான் நான் எனது பயிற்சியில் கற்றுக் கொண்டது. அதனை அனைத்து பந்தங்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன். அந்த வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறிய போது துன்பமாக கருதினேன். ஆனால் அனைத்து நேரங்களிலும் அல்ல.

என் அம்மா சொல்லுவார், நீ வீட்டிற்காக என்ன செய்ய போகிறாய். நான் உன்னிடம் என்ன பேசுவது என்பார். நான் இரவில் தாமதமாக வீடு திரும்புவது அவருக்கு வேதனை அளித்தது. அதனாலேயே அவர் என்னுடன் வசிக்கவில்லை. அவர் எனக்கு பணம் அனுப்புவார். நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு ரூ.1.25 தருவார். அவர் என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
எனது குடும்பத்திற்காக அரசு பணம் எதையும் நான் செலவிட்டதில்லை. அதற்காக எனது தாய் மீது எனக்கு பாசம் இல்லை என அர்த்தமில்லை. நாடு தான் எனது குடும்பம் என என் வாழ்க்கை ஆகி விட்டதே அதற்கு காரணம். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.