தாயகத்தில் தவிக்கும் எமது மூத்தோர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை

யாழ் குடாநாட்டின் கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான அவசர மருந்துப்பொருட்கள ஆளுளுஅறக்கட்டளையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.இந்த முதியோர் இல்லத்திற்கு அவசரமாக பல மருந்துகள் இல்லாது பல நோயாளர்கள் அவதியுறுவதாகவும் அந்த மருந்துப்பொருட்களை தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர் குகபாலன் அவர்கள் முன்னின்று ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்து இன்றைய தினம் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண சமூக சேவை பிரதிப்பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம், வைத்திய கலாநிதி அருள்நேசன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன் ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை முதியோர் இல்லம் சார்பாக பெற்றுக்கொண்டார்கள்.
அறக்கட்டளையின் சார்பாக ஆளுளு இலங்கை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குகபாலன், உதவி ஒருங்கிணைப்பாளர் சந்திரா குமாரசாமி ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர். இந்த சமூகசேவையாளர்களுக்கும் இந்த அன்பளிப்புகளை வழங்கிய பின்வரும் கொடையாளிகளுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்…

தவநாதன் விரகநாதன் வட்டுக்கோட்டை 500 டாலர்கள்
சிவபாதம் கந்தையா காரைநகர் 250 டாலர்கள் சந்திரமோகன் நடராஜா நீர்கொழும்பு 25டாலர்கள் கபிலன் கந்தையா வடலியடைப்பு கூ200
ஹரிகரன் தவநாதன் வட்டுக்கோட்டை 200 டாலர்கள்;;
சதா நடா கந்தர்மடம் 100டாலர்கள்;;
விக்னேஸ்வரன்(யாக்கோ) 250டாலர்கள்;;

திருச்செல்வன் சிவசாமி புங்குடுதீவு 200டாலர்கள்;;
கதிர்காமு குடும்பம் புங்குடுதீவு 250டாலர்கள்;;
ரகு வல்லிபுரம் அரியாலை 200டாலர்கள்;;
சூரி மார்க்கண்டு இணுவில் 200டாலர்கள்;;
திலகன் கீர்த்திசிங்கம் புங்குடுதீவு 250டாலர்கள்;;
ஜெயானந்தன் பூதத்தம்பி புன்னாலைக்கட்டுவன் 200டாலர்கள்;;
லோகன் சுந்தரம் வேலணை 250டாலர்கள்;;
ஆனந்தராஜா விவேகானந்தசாமி
மாரீசன்கூடல் இளவாலை 200டாலர்கள்;;
கணேசரட்ணம். மு அளவெட்டி100டாலர்கள்;;
இவ்வாறான மனிதநேய உதவிகளை வழங்க விரும்புவோர், இந்த திட்டத்தில் பங்குபெற முகநூலின் மூலமோ அல்லது 416-844-0565 என்ற இலக்கத்தையோ தொடர்புகொள்ளலாம்.

நன்றி ஐயப்பன் ஆசியுடன்,கனகலிங்கம் சின்னத்தப்பிஆளுளு நிறுவுனர்
416-844-0565