தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

தமிழக தலைமை செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அவசரமாக டில்லி கிளம்பி சென்றுள்ளனர். இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.
தமிழக டிஜிபி திரிபாதி, அரசு உள்துறை இணை செயலர் முருகன் ஆகியோர் காலை ஏர் இந்தியா விமானத்தில் டில்லி கிளம்பி சென்றனர். தொடர்ந்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், உள்துறை செயலர் பிராபகர் இருவரும் தனியார் விமானம் மூலம் டில்லி கிளம்பி சென்றனர்.
சமீபத்தில் தேர்தல் முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் டில்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் அழைப்பின் பேரில், இவர்கள் டில்லி சென்றுள்ளதாக தெரிகிறது.
வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக முக்கிய ஆலோசனை நடத்த அதிகாரிகள் டில்லி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பதவி உயர்வு தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.