தற்கால நவீன மருத்துவம் நோயாளருக்கு வரப்பிரசாதம் என்பதே உண்மை

இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் தற்போது அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளரை பரிசோதனைக்கு உட்படுத்த அதிதொழில்நுட்பம் பொருந்திய மருத்துவ சாதனங்கள் உள்ளன.

ஆனாலும் உலக மக்களை அச்சுறுத்தும் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். அதே ஆண்டில் ஐரோப்பாவிலும் இந்த நோய் பரவியுள்ளமை தெரியவந்தது. எவ்வாறாயினும் இந்நோய் முதன் முதலில் உகண்டா, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில்தான் தோன்றியது எனக் கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக நகர்ப்புறங்களில் இயங்கும் விபசார விடுகளுக்குச் செல்பவர்கள் எச்.ஐ.வி வைரஸ் தாக்கத்துக்குள்ளாகின்றனர் எனலாம். ஆட்கொல்லி நோயான எய்ட்ஸை முழுமையாக இல்லாவிட்டாலும் அது பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

நியூயோர்க்கில் அமைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றின் பிரகாரம் 2018ம் ஆண்டு வரை சுமார் அறுபது மில்லியன் மக்கள் எச்.ஐ.வி கிருமி காவிகளாக உள்ளனர். இவ்வெண்ணிக்கையில் இருபது மில்லியன் பேர் மருத்துவ சிகிச்சை பயன் அளிக்காத நிலையில் மரணத்தைத் தழுவினர். எஞ்சியோர் தங்களது குருதியில் எச்.ஐ.வி வைரஸை தெரிந்தோ, தெரியாமலோ வருடக்கணக்கில் காவித் திரிகின்றனர்.

நம் நாட்டிலும் அக்காலகட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் வரை எச்.ஐ.வி காவிகளாக இனங்காணப்பட்டனர்.இந்தியாவைப் பொறுத்த வரை அங்கு சுமார் ஆறு மில்லியன் மக்கள் எச்.ஐ.வி வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகையவர்கள் சாதாரணமாகச் சுகதேகிகளாகக் காணப்படலாம். ஆயினும் இத்தகைய காலப் பகுதியில் அவர்கள் உடல் உறவின் போது இவ்வைரஸை பரவச் செய்யும் சாத்தியம் உண்டு. இழக்கின்றார்.

தெற்கு ஆசியாவில்தான் எய்ட்ஸ் அதிகமாகப் பதவி வருகிறது. பிரதானமாகத தாய்லாந்தைக் குறிப்பிடலாம்.

இது தவிர தொற்றாநோய்களும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பொதுவாகப் பிணியின்றி வாழ்வதற்கு போஷாக்கான உணவு வகைகளைத் தினமும் உட்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். குடிநீரில் அதிகபட்ச சுத்தம் பேணுவது அவசியம். புகைத்தல், போதைவஸ்து பாவனை, மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல் நன்மை பயக்கும்.

பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள நாட்டு மக்களின் பிரதான உணவாக அரிசி (சோறு) பாவனையில் உள்ளது.சாதாரணமாக மக்கள் தவிடு நீக்கிய வெள்ளை அரிசியையே விரும்பி உண்கின்றனர். நமது உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலைப்படுத்தி வைத்திருப்பதற்கு இன்சுலின் சுரக்கின்றது. இன்சுலின் சுரப்பது குறைவடைந்த நிலைமை ஏற்படுகின்ற வேளையில் வெள்ளை அரிசிச் சோற்றை உட்கொண்டால் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். நீரிழிவு நோயின் தாக்கம் உச்சக்கட்ட நிலைக்குச் சென்றால் உடலின் அவயங்கள் சிலவும் பாதிப்புக்குள்ளாகின்றன.

இரத்த அழுத்த நோயாளருக்கு ஆயுட்காலம் வரை மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறு டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.

மனித உயிர்வாழ சுத்தமான குடிநீர் அவசியம்.மேலும் மது, போதைவஸ்து போன்றவற்றைத் உட்கொள்பவர்களுக்கு பல்வேறுபட்ட நோய்கள் தோன்றுகின்றன. புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆபத்தான வியாதிகள் உண்டாகின்றன. உலகெங்கிலுமுள்ள நோயாளர்களின் நிம்மதிக்கு உத்தரவாதம் அளிப்பது இன்றைய நவீன மருத்துவத்துறை என்பது உண்மை.

அருணா தர்மலிங்கம்
வந்தாறுமூலை