தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராக – உதயன்-2017 பல்சுவைக் கலைவிழா

தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராகவும் நகைச் சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவராகவும் அமையப்போகின்றன உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் இடம்பெறப்போகின்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் இன்று திரு ராஜா அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பேச்சாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்காபுறோ நகரில் செப்டம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “நல்ல வாழ்க்கைத் துணைக்கு அவசியமானது அன்பா? அல்லது அறிவா?” என்பதாகும். ஸ்காபுறோவில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி கோதை அமுதன், திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், கவிஞர் புகாரி மறறும் டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.. அத்துடன் ஸ்காபுறோ விழாவில் “பைரவி” இசைக்குழுவின் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக பாடகிகள் பாடுகின்றார்கள். நடனங்களும் உரைகளும் இடம்பெறுகின்றன.

மொன்றியால் நகரில் செப்டம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “மகிழ்ச்சியான வாழ்க்கையை எமக்குத் தருவது அவசியமானது பணமா அல்லது புகழா?” என்பதாகும். மொன்றியால் நகரில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி டாக்டர் பேபி குமாரி, , திருவாளர்கள் :தமிழ் மணி உயிரவன், ஆத்மஜோதி உதயகுமார், ஜெகசோதிலிங்கம் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.

அத்துடன் மொன்றியால் விழாவில் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக பாடகிகள் பாடுகின்றார்கள். நடனங்களும் உரைகளும் இடம்பெறுகின்றன.

ஸ்காபுறோவில் நகரில் அனுமதிச் சீட்டுக்கள் உதயன் பத்திரிகை அலுவலகத்திலும், சங்கர் அன்கோ, சாமி அன் சன்ஸ் மற்றும் பிரியாஸ் சுப்பர் மார்க்ட் (மார்ககம்) ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். Tickets only $ 20.00

மொன்றியால் நகரில் அனுமதிச் சீட்டுக்களை துர்க்கா பேனிச்சர், Fruits Happy (514 342 4229) Thanjai Restaurant (514 419 9696 ) AMR Inc Fruiterie ( 514 334 6737) ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். Tickets only $ 10.00

மேலதிக விபரங்களுக்கு 416 732 1608, 416 752 1524 அல்லது மொன்றியால் 514 924 3436 , 514 465 1053

COMMENTS

 • VARADARAJAN KRISHNASWAMI55

  I just want to meet Raja (pattimanram naduvar) if possible.

  I am a Canadian Tamil. I am a speaker with Raja in pattimandrams at New Jersey and Delaware few years ago. I narrowly missed out the opportunity of participating as speaker but love to attend the function.
  I need to reserve a ticket for me.

  I am college mate of Sugi Sivam and we represented our college in many competitions.

  My contact number is 416-727-8065

 • netultim2

  Pl come to Pattimandram and meet us on the side of the stage and introduce yourself and you shall able to meet. Hope this helps

Comments are closed.