தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்.

.தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..

இந்த அற்புதமான வைபவம் வெள்ளிக்கிழமை 16-08-2019 அன்று மாலை இனிதே நிறைவு பெற்றது.

அதில் நாமும் கலந்து கொண்டு தரிசித்து வரம் பெற்று பக்தியை உணர்ந்தோம்.
தமிழ்நாடு காவல்துறையினர் துணை செய்தனர்.

இதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள். காஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித தலங்கள் நிறைந்த ஊர். இங்கு உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மூலவரான அத்திவரதர் தான் 40 வருடங்களுக்கு ஒருமுறை பொது மக்களுக்கு அருள் பாலிப்பார். இந்த விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. முதல் 31 நாள்கள் சயனகோலததில்(படுத்த கோலம்) காட்சி அளித்தார் அத்தி வரதர். கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

அவரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் கடந்த 48 நாளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் கடைசி சில நாள்களில் மிகமிக அதிகப்படியான மக்கள் வந்து தரிசனம் செய்தார்கள். இந்த 48 நாளில் சுமார் ஒருகோடி பேர் வரை அத்தி வரதரை தரிசனம் செய்திருப்பார்கள். இவர்களுக்காக கடந்த 48 நாட்களும் இரவு பகல் பாராமல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் உழைத்தனர். இதேபோல் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் ஏராளமான அதிகாரிகளும் விழாவுக்காக கடுமையாக பணியாற்றினார்கள். இதன் காரணமாக இந்த அத்தி வரதர் வைபவம் சீரும் சிறப்புமாக நடந்தது.

கனடாவிலிருந்து நாமும்; கலந்து கொண்டோம். எமது சென்னைப் பிரதிநிதி பிரகாஸ் அவர்களுக்கு நன்றி1!!!!