Go to ...
Canada Uthayan Tamil Weekly
* தேர்தல் வெற்றிக்காக காங்., எந்த எல்லைக்கும் செல்லும்: தேவகவுடா    * சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்    * 'தவறு நடந்தது உண்மை தான்': மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்    * இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்    * கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லமிட்டெட் என்ற சென்னை நகைக் கடை அதிபர் சுமார் 824 கோடி ரூபாய் கடன்: சி.பி.ஐ. சோதனை
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, March 23, 2018

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளைத் தீர்க்க ரணிலுக்கு என்ன தேவை உள்ளது?


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த பல பொதுத் தேர்தல்களிலும் முதன் முதலாக நடத்தப்பெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றத்தையும் வடக்கு மாகாண சபையையும் அதன் அங்கத்தவர்கள் மிகவும் கம்பீரமாக அலங்கரித்து வந்தார்கள். வடக்கில் வாழும் மக்களும் வன்னியில் வா(டு)ழும் மக்களும் தங்கள் பிரச்சனைகள் அனைத்திற்குN மநல்ல தீர்வு வரப்போகின்றது என்று காத்திருந்தார்கள். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போக்கு திசை மாறிச் சென்றதை மக்களும் சில தலைவர்களும் நன்கு அவதானித்தார்கள். அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதிபர் விக்கினேஸ்வரன் அவர்கள்.
மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி ஆக்கவும் ரணிலைப் பிரதமராக்கவும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மக்கள வாக்களித்தார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தமது தலைவர்கள் தவறு செய்கின்றார்கள் என்பதை மக்களும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்ற தலைவர்களும் முன்வந்தார்கள். இதே வேளை கூர்மையான அரசியல் பார்வையுள்ள வடபகுதி புத்திஜீவிகள் பலர் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்னும் நம்பிக்கை தரும் அமைப்பும் தோற்றம் பெற்றது.

இவ்வாறு இருக்க, தமிழரசுக்கட்சி தமிழ் மக்களை அழி வுப் பாதைக்கு அழைத்து செல்கின்றது. அதன் தன்னிச்சையான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, தமிழ் மக்க ளுக்கு புதிய தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற சிந்தனை வடக்கிலும் கிழக்கிலும் உதித்தது. இதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தொடர்பாக எங்கும் எல்லாத் திசைகளிலும் விமர்சனங்கள் பலமாக எழுந்தன. இவ்வாறு தோன்றிய உள் முரண்பாடுகள் இன்று கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் பலவற்றை அதிருப்தி அடையச் செய்துள்ளன. இதன் விளைவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளவுபடும் நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறான நேரத்தில் ரணில் விக்கிரமசிங்;க என்னும் பிரதமர் இந்த முரண்பாடுகளை தீர்ப்பதில் மிகவும் கவனமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை “ இந்த ரணிலுக்கு ஏன் இவ்வளவு அக்;கறை” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாம் முன்னர் பல தடவைகள் இந்தப் பக்கத்தில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தோம். அவற்றில் ஒன்று “சுமந்திரனு;ககும் ரணிலுக்கும் உள்ள “உறவு” பற்றியது. ரணில் வி(அ)க்கிரமசிங்கா தான் சுமந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்தாகவும் அதுவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூலமாக சுமந்திரன் வெற்றிபெற்ற வந்தால் ரணில் பிரதமராக பதவி வகிக்கப்போகின்ற அரசாங்கத்திற்கும் நன்மை என்பதை ரணில் உறுதியாக நம்பினார் என்றும் கொழும்பில் உள்ள சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகையாளர்கள் மத்தியில பேசப்படுகி;ன்ற விடயமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு படாமல் பாராமன்றத்தில் இருந்தால் தான் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசுக்கு பாதிப்புக்;கள் வராது, அத்துடன், தமிழ் மக்கள் மீது இந்த அரசாங்கத்திற்கு நல்லெண்ணம் உள்ளது என்;றெல்லாம் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைக்கலாம் என்ற நம்பிக்கை ரணில் விக்கிரமசிங்கவின் மனதில் ஆழமாக பதிந்துள்ள விடயம்.

இவ்வாறு இருக்க, தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த ஈபிஆர்எல்எப் என்னும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மற்றும் இதர கட்சிகளான தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்), புனர்வாழ்வு அளிக்கப் பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், சமூக சமத் துவத்தினை ஊக்குவிக்கும் பொது அமைப்பு க்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் அலு வலகத்தில்சந்தித்து கல ந்துரையாடி இருந்தன. இந்த சந்திப்பான பிரதமர் ரணிலை தடுமாறச் செய்துள்ள விடயம் தற்போது கொழும்பில் நன்கு பேசப்படுகின்ற ஒரு விடயமாக உள்ளது தமிழ் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த பாராளு மன்ற உறுப்பினர்களால் தாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, மக்கள் கொடுத்த ஆணையை மறந்து அரசின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றி, உள்நாட்டிலும் சர் வதேச அரங்கிலும் அரசைப் பாதுகாக்கும் ஒரு கட்சியாக தமிழரசுக் கட்சி செயற்பட்டுக் கொண்டிருப்பதாலும் சமஷஸ்டி என்பதற்கு இடமே இல்லை ஒற்றையாட்சிதான் முடிந்த முடிவென வும் சமஷ்டி கிடையாது எனவும் ஜனாதிபதியும் பிரதமரும் உள்நாட்டிலும் வெளிநாடுக ளிலும் வலியுறுத்திக் கூறிய பிறகும் இடைக்கால அறிக்கை என்பது சமஸ்டியைக் கொண்டது என தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டு போகும் நிலையில் அரசியல் சாசன வழி நடத்தல் குழு அமர்வுகள் எழுபத்து மூன்று முறை கூடிய பொழுதிலும் அதில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வடக்கு-கிழ க்கு இணைப்பைப் பற்றிபேசாது, வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று கூறி வரும் சூழ்நிலையிலும் வடக்கு-கிழக்கு உட் பட முழு இலங்கையிலும் பௌத்தத்திற்கு முதலிடம் என்ற விடயத்தை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டு சிங்கள பௌத்த மேலா திக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ள சூழ்நிலையில், மாற்று அணி ஒன்றின் தேவை மக்களாலும், தமிழ் அரசியல் கட்சிகளாலும் உணரப்பட்டது. இதற்கான முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பல்வேறு பிரச்சனைகள் மத்தியில் சாதாரண தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இந்த வேளையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் கட்சி அதிகாரத்தை பெறுவதற்காக அல்ல பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மட்டுமே என்ற கோசம் முன்வைக்கப்பட வேண்டியது தற்போதைய நெருக்கடியாக கால கட்டத்தில் மிக அவசியமாக உணரப்படப் வேண்டியதொன்றாகும் என்பதையும் நாம் இங்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2