தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு

பிரான்ஸ் “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சிக்கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,யாழ் மாநகர முதல்வர் ஆகியோருடன் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு.
14/07/2018 சனிக்கிழமை அன்று, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு மாவை சேனாதிராசா, திரு சுமந்திரன் மற்றும் யாழ்மாநகரசபை முதல்வர் (மேயர்) திரு ஆர்னோல்ட் ஆகியோருக்கும்,புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று பிரான்சு நாட்டில், “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சிக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இச்சந்திப்பில், முக்கியமாக புதிய அரசியல் யாப்பின் நகல் தொடர்பாகவும் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் விவகாரம் பற்றி தமிழர் தரப்பு நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இச்ச்ந்திப்பில், தமிழருக்கான அரசியல்தீர்வு, அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு நோக்கிய நகர்வுகளில்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, பங்குபற்றிய அனைத்து புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் அமைப்புக்களின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது.

உத்தேச அரசியலமைப்பு வரைபு வெளிவருமென எதிர்பார்க்கப்படும் நிலையிலும், 2018 பங்குனியுடன் மனிதவுரிமை விவகார பொறுப்புக்கூறலிருந்து இலங்கை அரசு வெளியேறக்கூடிய அபாயமுள்ள நிலயிலும் இச் சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முடிவில், இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை மற்றும் தாயகத்தின் அரசியல் தீர்வு நடவடிக்கைகள் மற்றும் மீள்கட்டுமானம், சமூக பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான வேலைகளிலும் இணைந்து செயற்படுவதென, இக் கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினரதும் சம்மதத்துடன் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் யாழ் மாநகர முதல்வருடனான சந்திப்பில் யாழ்நகர அபிவிருத்திப் பணிகள் பற்றியும் இவ் விடயத்தில் மாநகரசபை எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

18 யூலை 2018 அன்று வெளிச்சம் வாழ்வியல் வழற்சி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரபிதா ஆர்னோல்ட் அவர்களுக்கும் பிரான்ஸ் நாட்டின் காஸ் சார்சல் Garges-Les-Gonesse நகரசபையின் பிரதி நகர பிதா சேர்யியா மகேந்திரன் (Cergya Mahendran) மற்றும் நிதிவிடடயங்களுக்கு பொறுப்பான பிரதி நகரபிதா மரி குளுட் லலுடுகும் (Marie Claude DALLWIADU) நட்பு ரீதியான சந்திப்பு நடைபெற்றது. இதன் போது யாழ் மாநகரசபை பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.இதில் சிறுவர் முன் பள்ளிகளில் (nursery) கல்வி பயிலும் சிறுவர்கள் பயனடையக்கூடிய வகையில் கற்றல் உபகரணங்கள் மற்றும் போசாக்கு உணவு போன்ற விடையங்களில் உதவிகள் வழங்குவதற்கு ஆராய்வதாக தெரிவிகப்பட்டது. இதற்கான விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் புரட்டாதி மாதஇறுதிக்கால பகுதிதிகளில் உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெருவிக்கபட்டது. முக்கியமாக எதிர்காலத்தில் Garges-Les-Gonesse நகருடன் இணைந்து எவ்வாறு யாழ்மாநகரின் அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் என்றும் ஆராயப்பட்டது

அத்தோடு 20ம் திகதி ஆடி மாதம் பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதி Sevran நகர முதல்வர் திரு Stephane BLANCHET உடனான சந்திப்பு ஒன்று Sevran நகரத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் யாழ் நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டு அந்நகர முதல்வரிடம் இருந்து சில உதவித்திட்டங்களிற்கான சாதகமான பதில்களும் பெறப்பட்டது. இச்சந்திப்பில் மாநகரமுதல்வரின் இரு நிர்வாக செயலாளர்கள் திரு William HERMAN திருமதி Rosandre VALLERAY அவர்களும் கலந்துகொண்டனர்.

இறுதியாக “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சி அமைப்பினர் நெருக்கடிகள் மத்தியிலும் பிரான்ஸ்க்கு வருகை தந்து புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்தமைக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு மாவை சேனாதிராசா, திரு சுமந்திரன் மற்றும் யாழ்மாநகரசபை முதல்வர் (மேயர்) திரு ஆர்னோல்ட் ஆகியோருக்கும் “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சி அமைப்பின் சார்பில் நன்றியை தெரிவிப்பதாக தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்