தமிழர் தரப்பில் உறுதியான தலைமை உருவாவதை இந்தியாவும் இலங்கை அரசும் விரும்பவில்லை என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களுக்கிடையே நேர் மையான, விட்டுக்கொடுப்பற்ற, கொள்கையிலிருந்து விலகாத தலைமை உருவாவதை இலங்கை அரசும் இந்தியாவும் மேற்குலக மும் விரும்பவில்லை. அதனால் தான் தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சிகளை பலப் படுத்துவதாக சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்ராட்சி தேர்தலை எதிர் கொள்ளும் தமது கூட்டணியில் 80 வீதத்துக்கும் அதிகமான வேட்பாளர் கள் பொது அமைப்புக்களை சார்ந்தோரே எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர். எல்.எவ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இடையே உள்;ராட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஒரு புரிந்து ணர்வு கடந்த நவம்பர் மாதமே எட்டப்பட்டிரு ந்தது. இந்த தேர்தல் வெறுமனே ஒரு அபி விருத்தியை பிரதானமாக கொண்டிராமல், புதிதாக கொண்டுவரப்படவுள்ள ஒற்றையா ட்சி அரசியலமைப்பிற்கு மக்களிடையே ஆத ரவு உள்ளதா? மக்கள் யாருடைய பக்கம் உள்ளார்கள் என்பதை நாடி பிடிக்கும் தேர்த லாகவே இது உள்ளது.
அதன் அடிப்படையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற இணக்கப் பாட்டை எட்டியிருந்தோம். இதேபோன்று தமிழ் மக்கள் பேரவையின் மத்தியஸ்தத்தில் இரு கட்சிகளுமே இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுவது என தீர்மானிக்கப்பட்டிரு ந்தது. இந்த சந்திப்பு நவம்பர் 12ஆம் திகதி
நடைபெற்றிருந்தது. எனினும் கடந்த 27 ஆம் திகதி முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ் எம்மு டன் தொடர்பு கொள்ளவில்லை. சுரேஷ் பிரே மச்சந்திரன் டில்லி சென்று வந்த பின்னர் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடு தலை கூட்டணியோடு சேர்ந்து தான் தேர் தலை எதிர்கொள்ள வேண்டும் என எம்மிடம் கூறினார்.

எனினும் அதற்கு நாம் மறுப்பு தெரி வித்துவிட்டோம். பேரவையோடு மற்றும் எங்களோடு எட்டப்பட்ட முடிவுக்கு மாறாக இது அமைந்திருந்தது. எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான நிலைப்பாடு களை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, தமிழர் விடுதலை கூட்டணியின் பிழையான நிலைப்பாடுகளையும் மக்களுக்கு தெரியப் படுத்துவோம் என கூறியிருந்தோம். எனி னும் தனது சுய விருப்பின் அடிப்படையில் உதயசூரியனில் போட்டியிடவில்லை என கூறிய சுரேஷ், கிழக்கு மாகாண உறுப்பின ர்களை அழுத்தத்தினால் தான் உதயசூரிய னின் கீழ் போட்டியிட முடிவு செய்ததாகவும் எம்மிடம் கூறியிருந்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை மைகள் தேர்தலுக்காக என்றாலும் சமஷ்டி, வடகிழக்கு இணைப்பு என பேசி வருகின்ற னர். ஆனால் தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர் ஆனந்தசங்கரி சமஷ்டியை யும், வடகிழக்கு இணைப்பையும் ஏற்க வில்லை. மாறாக 13ஆம் திருத்த சட்டத்தையே அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட மோசமான கொள்கையை கொண்டுள்ள தமிழர் விடுதலை கூட்டணி யுடன் எவ்வாறு இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுவது? அதேபோன்று இன்னொரு கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதும் தமிழரசு கட்சியின் சர்வாதிகார த்தையே அங்கும் தோற்றுவிக்கும்.

தமிழர் தரப்பில் நியாயமான, கொள்கை உறுதியுடைய தலைமை உருவாவதை இந்தியாவும், மேற்குலகும், இலங்கை அர சும் விரும்பவில்லை. அதனால் தான் சுரேஸ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்றுள்ளனர். எனி னும் சுரேஸ் மீது எமக்கு மதிப்பு உண்டு என் பதால் தான் அவருடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தோம். எனினும் அவர் எம்மை இறுதியில் ஏமாற்றி யுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.