- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்துள்ளது ஜெனிவாவில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து இனப்படுகொலை நடைபெறுகின்றது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37-வது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பில் ஐ.நா நன்கு அறியும்.
சிறுபான்மை இனத்துக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் அடக்குமுறையை சர்வதேசம் கண்டிக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.