- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

தமிழர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி”
தமிழர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” . மேற்படி யாழ்ப்பாண தினசரியின் அண்மைய ஆசிரிய தலையங்கம் ஒன்றில் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளது. மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பா என்றொரு திரைப்படம் வெளிவந்தமை பலருக்கும் ஞாபகம் இருக்கும்.
அதில் தனது மகனுக்குத் தந்தை கூறு கின்ற ஆலோசனை இருக்கிற இடம்தெரியா மல் இருந்து விட்டுப் போகவேணும் என்பது தான். அந்தக் கருத்து அப்பா படத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது எங்களில் பலருக்கும் பொருத்தமானது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைதி யாக இருந்துவிட்டுப் போவது என்ற முடிவில் பலர் இருக்கின்றார்கள்.
இது ஒரு வாழ்க்கையா? என்பதுதான் நம் கேள்வி.
வாழ்க்கை என்றால் சவால்கள் இருக்கும். போட்டி இருக்கும். தர்மத்தின் வழியில் நடக்கின்றவர்களை அதர்மம் துரத்தும்.
இங்குதான் நீதியுடன் தர்மத்துடன் எங்கள் வாழ்வு நடக்க வேண்டும் என்ற உணர்வு ஏற் படும். இதனை நிலைநிறுத்துவதற்காக நாம் போராட வேண்டும்.
இந்தப் போராட்டம்தான் எங்கள் எதிர்கால சந்ததியின் வாழ்வை வழிப்படுத்தும்; அர்த்தப் படுத்தும்.
இதைவிடுத்து இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போவது என்றால் பிரச்சினைகளை, சிக்கல்களை நாங்கள் கையாளாமல் எங்கள் எதிர்காலச் சந்ததியிடம் கைமாற்ற முற்படுகிறோம் என்றுதான் பொருள்படும்.
இப்போது கூட விடுதலைப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர் எங்கள் தமிழ் அரசியல் எப்படியாக உள்ளதென்பது நாங்கள் அறியாத தல்ல.
எத்தனையோ தியாகங்கள்; எத்தனையோ மரணங்கள்; எவ்வளவோ இழப்புக்கள் என்ற பட்டியலின் முடிவில்,
வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிர்விட்டவர் களின் குருதி காய்வதற்கு முன்பாகவே தமிழர் அரசியல் என்பது எப்படியாக மாறிவிட்டது என்பதை எம் கண்களால் காண்கிறோம்.
கண்முன்னால் தமிழினத்துக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது. தீர்வு கிடைக்காமல் செய்யப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை தடுக்கப் படுகிறது.
இதுவிடயத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் மறைமுகமாகப் பங்களிப்புச் செய்கின்றன எனும்போது,
தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியாகும் என்பது பற்றி நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது.
எங்கள் காலம் ஏதோ முடிந்துவிடும். ஆனால் எங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்ற சந்ததி நிம்மதியாக இந்த மண்ணில் வாழ முடியுமா என்ன?
ஆகையால் தமிழினம் வாழ்வதை உறுதிப் படுத்த ஆரோக்கியமான தமிழ் அரசியல் தலைமையின் உருவாக்கத்துக்காக தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்.