தமிழருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை எவறாலும் அழிக்க முடியாது என்கிறது சுதந்திரக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ அன்றி அவர்களோடு குலாவித்திரியும் ரணில் விக்கிரமசிங்காவினாலோ, வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்து விட முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் தலைவர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படைவாத உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர்.
ஆனால் அது நடக்காது.அதேநேரம் நாட்டுக்கு பொருத்தமான அரசியல் யாப்பு ஒன்றுக்கு தாங்கள் ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம் சிறிலங்கா சுதந்திர கட்சியில் எந்த பிளவுகளும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர கட்சியின் பல்வகை நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகன்றன.ஜனாதிபதியை, எதிர்கட்சித் தலைவர் முழுமையான கூட்டணிய அமைத்து அரசாங்கத்தை உருவாக்கும் பின்புலத்தை ஏற்படுத்த விருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி பலமாக இருக்கிறது என்பது உண்மையாக இருந்தால், தாங்கள் உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.