தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்க: முதல்வருக்கு விஷால் கடிதம்

தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில். ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள் நம் தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.
நம் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது.
தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து, எதிர்கால விவசாயிகளின் வாழ்வை தாங்கள் வளமாக்க வேண்டும்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.