தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆர்.டி.ஓ., பொதுப்பணித்துறை, டாஸ்மாக், அறநிலையத்துறை, மாநகராட்சி மற்றும் ஆவின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோனை நடத்தினர். சென்னை, வேலூர், தேனி, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 24 அரசு அலுவலகங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக வேலூர் ஆவின் தலைமை அலுவலகத்தில் மட்டும் ரூ.14.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் வடக்கு, தெற்கு டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் ரூ.1.32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.