தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பணபலத்தை மீறி மக்கள் பலத்தை நம்பி ஆர்.கே நகரில் போட்டியிடுகிறோம். வருடாந்திர பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கிறார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் விரைவில் பரப்புரைக்கு வருவார்.

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம். நதிகள் இணைப்பு விவசாயிகள், கச்சத்தீவு மீட்பு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.