தமிழகத்தில் நடந்த இடை தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் ஆ தி மு க மகத்தான வெற்றி

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்:

அதிமுக; திமுக வேட்பாளர்களை இடையே வாக்கு வித்தியாசத்தில் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கான மாற்றம் ஏதும் இல்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஒரு வகையில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதே காரணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகின்றனர்.

அதேவேளையில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்ட தேமுதிகவின் பலம் இந்த தேர்தலில் மேலும் சரிந்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக 1,179 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேமுதிக- 1070 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது. பாஜக 2940 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 1092 வாக்குகள் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக – 6559 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 4105 வக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

மூன்று தொகுதிகளிலும் தேமுதிகவைவிட பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும் டெபாசிட் இழந்தது. தேமுதிகவுக்கும் அதேநிலை தான்.

தேர்தலுக்கு தேர்தல் சரியும் தேமுதிக:

கட்சி ஆரம்பித்த 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 12 சதவீதம் வாக்குகள் பெற்றது. 2011-ல் அதிமு.கவுடன் கூட்டணி அமைத்து 7.88% வாக்கு பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது தேமுதிக. கடைசியாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தமாகா கூட்டணி உடன் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டார்.

அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும் திமுக கூட்டணி 98 தொகுதிகளையும் கைப்பற்றின. இத்தேர்தலில் தேமுதிக படுதோல்வி தழுவியது. தேமுதிக 2.4% வாக்குகள் மட்டுமே பெற்றது.

தேர்தல் விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது சட்டப்பேரவைத் தேர்தலில் 30 உறுப்பினர்களுக்கு ஒரு உறுப்பினர் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பதிவான மொத்த வாக்குகளில் அந்தக் கட்சி பெற்ற ஓட்டுகள் 6% இருக்க வேண்டும். ஆனால், தேமுதிக 2.4% வாக்குகள் மட்டுமே பெற்றது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தேர்தல் முடிவுகள் தேமுதிகவை இன்னும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளிலும் தேமுதிகவைக் காட்டிலும் பாஜக அதிக வாக்குகள் பெற்று அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3-வது இடத்தில் உள்ளது.

Keywords: தமிழக தேர்தல் களம், தேமுதிக, பாஜக, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்.