- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும் – அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்
நாள்தோறும் டிக் டாக் செயலியால் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கடந்த வருடமே டிக் டாக் செயலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.
எனினும் தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் செயலியில் இடம்பெறாது என்று கூறி அனுமதி வாங்கி மீண்டும் வந்தது டிக்டாக் செயலி.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பதில் அளித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-
தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும். டிக் டாக் செயலியால் தவறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
டிக்-டாக் தொடர்பான வழக்கில் தடை விதித்த போதிலும், தமிழர்களுடைய கலாசாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்துவோம் என்று அந்நிறுவனம் பதிலளித்ததால், அந்த தடை நீதிமன்றம் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. செய்தித்தாள்களில் தொடர்ந்து பலர் இறந்து விட்டதாக செய்திகள் வருகிறது. தவறான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாக தான் செய்திகள் வருகின்றன. மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.