தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா தொற்று தொடரும் ?

கரோனாவால் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை தமிழகத்திலுள்ள நெல்லையில் உருவாக்கியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடைமுறையால் ஆதரவற்ற பலரும் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது. அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

40 நாட்கள் ஊரடங்கு காலம்.. ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது. அதுவும் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கே திரையிடப்பட்ட முதல் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். உண்மையில் இவர்கள் ஆயிரத்தில் ஒருவன்கள்தான்.